» சினிமா » செய்திகள்
டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)
டாக்ஸிக் படத்தின் டீஸரில் உள்ள ஆபாசமான காட்சிகள் உள்ளதாக ஆம் ஆத்மி மகளிர் அமைப்பினர் மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம், ‘த டாக்ஸிக்’. ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மார்ச் 19-ல் ரிலீஸாகும் இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி இதன் டீஸர், வெளியானது. அதில் ஆபாசமான காட்சிகள் இருப்பதாக அதன் இயக்குநர் கீது மோகன்தாஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அமைப்பினர் இந்த டீஸருக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
அதில், "டாக்ஸிக் படத்தின் டீஸரில் உள்ள ஆபாசமான மற்றும் வெளிப்படையான காட்சிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக நலனுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கின்றன. வயது குறித்த எந்த எச்சரிக்கையும் இன்றி வெளியிடப்பட்டுள்ள இந்த டீஸர் பெண்களின் கண்ணியத்தை கெடுக்கிறது; கன்னட கலாச்சாரத்தை அவமதிப்பதாக உள்ளது.
சமூகத்துக்கு எதிரான, குறிப்பாக சிறார்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் அந்த டீஸருக்கு தடை விதிக்கவும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் மாநில அரசிடம் ஆணையம் கோரிக்கை வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க!" - 'ராயன்' தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் ஆதங்கம்!
திங்கள் 27, ஜூலை 2026 4:53:22 PM (IST)

50 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் முதல்வரின் திரைப்படம்: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் சாதனை!
வியாழன் 23, ஜூலை 2026 4:51:10 PM (IST)

நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை அக்-1ல் ரிலீஸ்
புதன் 22, ஜூலை 2026 5:54:13 PM (IST)

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும்: ஆனந்த் அறிவுறுத்தல்!
சனி 18, ஜூலை 2026 4:16:27 PM (IST)

