» சினிமா » செய்திகள்
நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை அக்-1ல் ரிலீஸ்
புதன் 22, ஜூலை 2026 5:54:13 PM (IST)
சர்வதேச விருதுகளைக் குவித்து திரைக்கு வரும் 'ஏழு கடல் ஏழு மலை': அக்டோபர் 1-இல் உலகளவில் வெளியீடு!
சர்வதேச அளவில் பெரும் பாராட்டுகளையும் பெருமையையும் குவித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் (V House Productions) சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் இதயங்களைத் தொடும் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
மீண்டும் தமிழில் நிவின் பாலி: சிறிய இடைவெளிக்குப் பிறகு மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நேரடித் தமிழ்ப்படத்தில் மீண்டும் களமிறங்குகிறார்.
கதாநாயகனாக அஞ்சலி: 'நடிப்புத் தாரகை' என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகை அஞ்சலி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சூரியின் கலக்கல் காம்போ: கதையின் நாயகனாக வெற்றி நடைபோட்டு வரும் நடிகர் சூரி, நிவின் பாலிக்கு இணையான மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இயக்குநர் ராமின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
எதிர்பார்ப்பைக் கூட்டும் டீசர்:
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகத் தற்போது வெளியாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டீசரில் நிவின் பாலியின் வித்தியாசமான தோற்றமும், அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஸ்டைலிஷ் லுக்கில் தோன்றும் சூரியின் நடிப்பும், பின்னணியில் நகரும் அந்த ரயில் பயணமும் ரசிகர்களைப் ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. குறிப்பாக, சமீபகாலமாகத் தீவிரமான (Serious) கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரியின் நகைச்சுவை பரிமாணத்தை மீண்டும் இப்படத்தில் பார்த்து ரசிக்க முடியும் என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது.
சர்வதேச அரங்கில் படைத்த சாதனை:
இத்திரைப்படம் ஏற்கனவே தயாராகிவிட்ட போதிலும், பல்வேறு புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் (International Film Festivals) கலந்துகொண்டு பல பிரிவுகளில் விருதுகளைக் வென்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் பாராட்டுகளையும் பெருமையையும் குவித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும்: ஆனந்த் அறிவுறுத்தல்!
சனி 18, ஜூலை 2026 4:16:27 PM (IST)

ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 6, ஜூலை 2026 12:28:49 PM (IST)

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் 6 இயக்குநர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:09:16 PM (IST)

அரசன் படம் வசூலில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும்: தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை!
சனி 4, ஜூலை 2026 5:36:02 PM (IST)

