» சினிமா » செய்திகள்

அரசன் படம் வசூலில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும்: தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை!

சனி 4, ஜூலை 2026 5:36:02 PM (IST)

ArasansimbuDhanu.jpg

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் வசூலில் ஈடு இணையே இல்லாத வகையில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும் என்றும், மாபெரும் வெற்றியைப் பெறும் என்றும் தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், சிலம்பரசன்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். சென்னை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகச் சிலம்பரசன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வடசென்னை பின்னணியில் அதிரடி கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கினோர், அமீர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்படம் சினிமா சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory