» சினிமா » செய்திகள்

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

ShakilaCellphone.jpg

பிரபல நடிகை ஷகிலா, கழுத்தில் கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தனக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து அவரே வீடியோ மூலம் விளக்கியுள்ளார். 

90-களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷகிலா, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தனது பிம்பத்தை மாற்றி அனைவராலும் "அம்மா" என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். யூடியூப் நேர்காணல்கள், சீரியல் என பிஸியாக இருந்த சூழலில், அவர் கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களைக் கலக்கமடையச் செய்தது. 

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய ஷகிலா, கழுத்துப் பட்டையுடன் (Neck Collar) தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: "எனக்குச் செல்போனில் கேம்ஸ் விளையாடும் பழக்கம் அதிகம உண்டு. தினமும் கட்டிலில் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டே தொடர்ந்து 4 மணி நேரம் வரை போனில் கேம் விளையாடுவேன். 

டீ, காபி குடிக்க மட்டுமே எழுந்திருப்பேன். இது தவிர பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன். இப்படித் தவறான நிலையில் (Posture) தொடர்ந்து போனைப் பயன்படுத்தியதால், எனது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை (Operation) செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டது." 

இந்த ஆபரேஷனுக்குச் சுமார் ரூ. 3 லட்சம் வரை செலவானதாகவும், படுக்கையிலிருந்து எழுந்திருப்பது, நடப்பது, சாப்பிடுவது போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூடப் பராமரிப்பாளர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

ஸ்மார்ட்போன் பயனுள்ள ஒரு கருவிதான் என்றாலும், அதைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், முக்கியமாகச் சிறிய குழந்தைகளிடம் செல்போன்களைக் கொடுத்துப் பழக்க வேண்டாம் என்றும் ரசிகர்களுக்குக் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடிகை ஷகிலா விரைவில் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory