» சினிமா » செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

dharman2ndSchedul.jpg

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று (ஆக. 13) தொடங்கியுள்ளது.  

இப்படத்தைத் தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில், "தி டெட்லி டாக்டர் (The Deadly Doctor)... ‘தர்மன்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இது பிரம்மாண்டமான அனுபவமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும், படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருப்பது போன்றும், அவரை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வழிநடத்துவது போன்றும் அமைந்த சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.  

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. பின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் எனக் கூறப்பட்டு அவர் விலகிய நிலையில், தற்போது ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படப் புகழ் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.  

இப்படத்தில் நடிகை சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி - கமல்ஹாசன் (தயாரிப்பு) - அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory