» சினிமா » செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!

திங்கள் 25, செப்டம்பர் 2023 3:41:58 PM (IST)



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.  இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து அவர் இயக்கத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். 

சமூக ஊடகங்களில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளப் பதிவில், "என்னுடைய 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன கதை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன்.இந்தப் படம் எல்லாவிதத்திலும் எனக்கு முக்கியமான படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இன்னும் என்னால் காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory