» சினிமா » செய்திகள்

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?

வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)



ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், 'ஜெயிலர்2' படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக இப்படத்தின் வில்லனாக நடிக்கும் மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory