» சினிமா » செய்திகள்

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்: நடிகை ஷீலா அறிவிப்பு!

சனி 2, டிசம்பர் 2023 12:19:50 PM (IST)

"திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்" என்று நடிகை ஷீலா ராஜ்குமார் அறிவித்துள்ளார். 

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் 2016இல் வெளியான ஆறாவது சினம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் 2017இல் ‘டுலெட்’ படம்தான் ஷீலா ராஜ்குமாரின் முழுமையான முதல் படம். இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்படது. பின்னர் மண்டேலா, திரௌபதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2 படங்களிலும் நடித்துள்ளார். மண்டேலா மிகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.  

பெரிதும் வரவேற்பு பெற்ற மலையாளப் படமான கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ள ஷீலா ராஜ்குமார் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில், "திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும் சோழன் வாலறிவன்” எனப் பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory