» சினிமா » செய்திகள்

ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்

சனி 13, ஜனவரி 2024 3:27:30 PM (IST)

"ரஜினியுடன் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை” என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘அயலான்’. இந்தப் படம் நேற்று வெளியானது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "‘அயலான்’ படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது. அதற்கான லீட் படத்தில் இருக்கிறது. இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதன் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதுவரை எடுத்ததை வைத்து உருவான டீஸரை கண்டு கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார். 

இந்தப் படத்தில் கமல்ஹாசனின் பங்களிப்பும் ஏதாவது ஒரு வகையில் இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளோம். ‘ஜெயிலர்’ படத்தில் நானும் நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது. நானும் நெல்சனும் நண்பர்கள் என்பதால் அப்படி வெளியானது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நான் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதிலும் உண்மை இல்லை” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory