» சினிமா » செய்திகள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சனி 3, பிப்ரவரி 2024 3:44:20 PM (IST)

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பிப்.9ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷ் - இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ஆக்சன் பாணியில் உருவான கேப்டன் மில்லர் பொங்கல் வெளியீடாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ஜன.12ம் தேதி வெளியானது.  ஆலய நுழைவுப் போராட்டம், அதிகாரத்துக்கு எதிரான புரட்சி என உருவான இப்படம்  பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. 

கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் வசூலாக உலகளவில் ரூ.17 கோடி  வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து, தெலுங்கில் வெளியானது. இப்படம் உலகளவில் ரூ.105 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் பிப்.9ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory