» சினிமா » செய்திகள்

அரிய வகை நோயால் இளம் நடிகை மரணம்! நோயின் அறிகுறிகள் என்ன?

திங்கள் 19, பிப்ரவரி 2024 3:41:21 PM (IST)



தங்கல் ஹிந்தி பட நடிகையான 19 வயது சுஹானி பட்னாகரின் உயிரை பறித்த அரியவகை தசை அழற்சியான, 'டெர்மடோமயோசிடிஸ்' நோயின் தீவிரம் மற்றும் அறிகுறிகள் குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஹரியானாவின், பரிதாபாத் நகரைச் சேர்ந்தவர் சுஹானி பட்னாகர். மல்யுத்த வீராங்கனையான இவர், மல்யுத்தத்தில் பெண்கள் பங்கேற்பது குறித்து, 'பாலிவுட்' நடிகர் அமீர் கானின் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படத்தில் அவரது மகளாக நடித்தார். அரிய வகை தசை அழற்சியான, 'டெர்மடோமயோசிடிஸ்' என்ற நோய் பாதிப்பு காரணமாக சமீபத்தில் அவர் உயிரிழந்தார்.

இந்த நோய் குறித்து டாக்டர்கள் கூறியதாவது: அரிய வகை தசை அழற்சி நோயான, 'டெர்மடோமயோசிடிஸ்' பெரும்பாலும் பெண்களை தான் அதிகம் தாக்குகிறது. பெரும்பாலும் 50 - 70 வயது வரையிலான பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அசாதாரண மரபணு, புற்று நோய், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் உள்ள திசுக்களையே தாக்கும், 'ஆட்டோ இம்யூன்' நோய்கள் இருப்பவர்களுக்கு இந்த தசை அழற்சி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சி காரணமாக அறிகுறிகள் தென்பட துவங்குகின்றன. பொதுவாக, உடலில் சூரிய ஒளி படும் இடங்களில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்படும்; அதில் அரிப்பு மற்றும் வலி இருக்கும். மேல் கண் இமைகளில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் வீக்கம் ஏற்படும்.

முழங்கால்கள், முழங்கைகள் மற்றும் கால் விரல்களில் சிவப்பு மற்றும் ஊதா நிற புள்ளிகள் ஏற்படும். குளிர் காலங்களில் மூட்டுகளில் வலி ஏற்படும். கரடுமுரடான மற்றும் வறண்ட சருமம், முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். கை விரல் நகங்களை சுற்றி சிவப்பு நிறத்தில் வீக்கம் ஏற்படும். கால்ஷியம் படிவதால், தோலின் பின்பகுதியில் தடிமனாக காணப்படும். கழுத்து, இடுப்பு, முதுகு, தோள்பட்டைகளில் தசை பலகீனம் ஏற்படும்.

எச்சில் விழுங்குவதில் வலி மற்றும் குரலில் மாறுபாடு, அசதி, காய்ச்சல் மற்றும் எடை குறைவு போன்றவை அறிகுறிகளாக தென்படும். இதை குணப்படுத்த முடியாது. அறிகுறிகளை குறைப்பதற்கான சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory