» சினிமா » செய்திகள்
மங்காத்தா 2 உருவாகுமா? அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு!
வியாழன் 11, ஜூலை 2024 3:27:43 PM (IST)

அஜர்பைஜானில் நடிகர் அஜித்தை இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் முக்கியமான வெற்றிப் படம் ‘மங்காத்தா’. 2011 ஆகஸ்ட் 31 அன்று வெளியான ‘மங்காத்தா’ அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான வெகுஜன சினிமா ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம். இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரை வாழ்விலும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது ‘மங்காத்தா’.
இந்தப் படத்துக்கு பின் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக அறியப்படுகிறார். தற்போது வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து ‘தி கோட்’ படத்தை இயக்கி வருகிறார். அதேநேரம் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. விடாமுயற்சி தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.
இதற்கிடையேதான் அஜர்பைஜானில் வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, "கடைசியாக இது நடந்துவிட்டது. ப்ரொமன்ஸ்” என்று கூறியுள்ளார். ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து மங்காத்தா 2 உருவாக படத்தில் பணியாற்ற வேண்டும் என கருத்து கூறிவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)

படம் ரிலீசான முதல் 3 நாட்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க தடை: நடிகர் விஷால் வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:16:41 PM (IST)

படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு: சரத்குமார் இரங்கல்!
புதன் 16, ஜூலை 2025 12:11:43 PM (IST)

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)
