» சினிமா » செய்திகள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!
புதன் 17, ஜூலை 2024 4:59:12 PM (IST)
சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகிய நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அத்துடன் பல பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது. இந்தக் கூட்டணியில் மீண்டும் இணைந்ததாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. சுதா கொங்கரா - சூர்யா இணையும் புதிய படத்தை 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும், இதற்கு ‘புறநானூறு’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.ஆனால், கால்ஷீட் உள்ளிட்ட சிக்கலால் சூர்யா படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யாவுக்கு பதிலாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல 2டி நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாகவும், அதற்கு பதிலாக புதிய தயாரிப்பாளர் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவரது நடிப்பில் அடுத்து ‘அமரன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் ‘புறநானூறு’ படத்தில் இணைவார் என தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த கமல்ஹாசன்: 6 முக்கியக் கோரிக்கைகளுடன் ஆலோசனை!
சனி 16, மே 2026 5:37:31 PM (IST)

