» சினிமா » செய்திகள்
அனைவருக்கும் மறக்க முடியாத படமாக காந்தா இருக்கும் : துல்கர் சல்மான் நம்பிக்கை
வெள்ளி 7, நவம்பர் 2025 3:38:50 PM (IST)

தமிழில் முக்கியமான படமாகவும், அனைவருக்கும் மறக்க முடியாத படமாகவும் ‘காந்தா’ இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. நவம்பர் 14-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் துல்கர் சல்மான் பேசும் போது, "இக்கதையை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’இருக்கும்.
‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்யஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி.
படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்: முதல்வர் விஜய் இரங்கல்
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:46:35 PM (IST)

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

