» சினிமா » செய்திகள்
ரஜினியுடன் மகாராஜா திரைப்பட இயக்குநர் நிதிலன் சந்திப்பு!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 4:51:31 PM (IST)

"மகாராஜா திரைப்படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வரை வசூலித்த ‘மகாராஜா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து இயக்குநர் நிதிலன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சூப்பர் ஸ்டார் ரஜினி சார், உங்களுடனான இந்த அற்புதமான சந்திப்புக்கு நன்றி.
வாழ்க்கை, அனுபவம், வாழும் முறைகள் என கிட்டத்தட்ட ஒரு நாவலை வாசிப்பதை போல இருந்தது. உங்கள் விருந்தோம்பல் மற்றும் பணிவை கண்டு நான் வியப்படைகிறேன். மகாராஜா திரைப்படம் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மீண்டும் ஒருமுறை நன்றி” என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான்! - சீமான்
திங்கள் 19, ஜனவரி 2026 12:30:40 PM (IST)

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:19:49 AM (IST)

