» சினிமா » செய்திகள்
இணையத்தில் கசிந்த ரஜினிகாந்த் பட பாடல் காட்சி!
வியாழன் 22, ஆகஸ்ட் 2024 11:57:42 AM (IST)
வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி வீடியோ இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். ஞானவேல் இயக்கி உள்ளார். படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். போலி என்கவுண்டருக்கு எதிரான கதை என்று தகவல்.
இந்த படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. படத்தின் பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி வீடியோ இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. வீடியோவில் துணை நடிகர்- நடிகைகளுடன் இணைந்து ரஜினி - அனிரூத் நடனம் ஆடும் காட்சிகள் உள்ளன.
பாடல் காட்சியை அதிக செலவில் பிரமாண்டமாக படமாக்கி இருப்பதை வீடியோ மூலம் அறிய முடிகிறது. யாரோ மாடியில் நின்று இந்த பாடல் காட்சியை திருட்டுத்தனமாக செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் பரவவிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே இணையத்தில் கசிந்து இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு: பத்ம பூஷன் விருதுபெற்ற மம்மூட்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
திங்கள் 26, ஜனவரி 2026 10:09:32 AM (IST)

ஏகே 64 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
சனி 24, ஜனவரி 2026 4:12:47 PM (IST)

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!
சனி 24, ஜனவரி 2026 3:21:08 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன்!
வியாழன் 22, ஜனவரி 2026 10:15:27 AM (IST)

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

