» சினிமா » செய்திகள்
நடிகர் விமல் வட்டியுடன் ரூ.3 கோடி கடனை செலுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:51:45 AM (IST)
நடிகர் விமல் வட்டியுடன் ரூ.3 கோடி கடனை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்த படத்துக்காக தயாரிப்பாளர் ஆர்.சிங்காரவேலன் மூலமாக பைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.5 கோடி கடன் வாங்கியுள்ளார். ஆனால், இந்த தொகையை அவர் திருப்பித் தராததால், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விமலுக்கு எதிராக கோபி வழக்கு தொடர்ந்தார்.இதற்கிடையில், இருவருக்கு இடையே சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில், சுமார் ரூ.3 கோடியை கொடுப்பதற்கு விமல் ஒப்புக் கொண்டார். இதன்படி பணத்தை கோபி கேட்டபோது, விமல் எந்த பதிலும் சொல்லவில்லை. இதையடுத்து, ரூ.3 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரத்தை விமலிடம் இருந்து கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பைனான்சியர் கோபி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இருதரப்பையும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி உத்தரவிட்டது. இதில் சமாதானம் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்கள் விமல், தயாரிப்பாளர் ஆர்.சிங்காரவேலன் ஆகியோர் ஆஜராகவில்லை.
மனுதாரர் கோபி தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், "மனுதாரர் கோபிக்கு, ரூ.3 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரத்தை 18 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

ஜன நாயகனுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:34:07 PM (IST)

அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:57:00 AM (IST)

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!
சனி 20, டிசம்பர் 2025 11:29:16 AM (IST)

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

