» சினிமா » செய்திகள்

ஹேமா குழு அறிக்கை குறித்து எதுவும் தெரியாது: நடிகா் ரஜினி!

திங்கள் 2, செப்டம்பர் 2024 11:37:10 AM (IST)

நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா்.

கேரள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா குழு தாக்கல் செய்த அறிக்கையைத் தொடா்ந்து, நடிகைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து முன்வைத்து வருகின்றனா்.

பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகா் ரஜினிகாந்த் அது குறித்து தனக்கு தெரியாது என பதில் அளித்துள்ளாா். மேலும் அவர் வேட்டையன்’, ‘கூலி’ திரைப்படங்களின் பணிகள் நன்றாக செல்கின்றன. சென்னையில் நடைபெறும் ஃபாா்முலா காா் பந்தயம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory