» சினிமா » செய்திகள்

இந்தி, தெலுங்கில் ‘தி கோட்’ திரைப்படம் தோல்வி: இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம்!

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 11:36:04 AM (IST)



இந்தி மற்றும் தெலுங்கில் ‘தி கோட்’ தோல்விக்கு காரணம் என்ன என்று இயக்குநர் வெங்கட்பிரபு காரணம் தெரிவித்துள்ளார். 

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் உலகளவில் ரூ.300 கோடி வசூலை நெருங்கிவிட்டது. தமிழில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழில் வசூலுக்கு குறைவில்லை.

ஆனால், இந்தி மற்றும் தெலுங்கில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. குறிப்பாக தெலுங்கில் ‘தி கோட்’ படத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து எக்ஸ் தளத்தில் ஆடியோ வடிவில் உரையாடும் போது பதிலளித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.

அதில், "தி கோட் படத்தில் சி.எஸ்.கே அணியின் காட்சிகளால்தான் இந்தி மற்றும் தெலுங்கில் படம் சரியாக போகவில்லை என நினைக்கிறேன். நான் ஒரு சி.எஸ்.கே அணியின் ரசிகன் என்பதால் பெங்களூரு மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். நான் சி.எஸ்.கே அணியின் ஆதரவாளர் என்பது ரத்தத்தில் ஊறியது. அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது” என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory