» சினிமா » செய்திகள்
விஜய் நடிக்கும் புதிய படம் போஸ்டர் வெளியீடு: அடுத்த ஆண்டு அக்டோபரில் ரிலீஸ்!
ஞாயிறு 15, செப்டம்பர் 2024 10:15:03 AM (IST)

விஜய் நடிக்கும் புதிய படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இந்த நிலையில் தீப்பந்தத்தை கையில் ஏந்தியபடியான படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். கட்சி தொடங்கியபோது ‘தி கோட்' படத்தில் நடித்து வந்தார். ‘தி கோட்' படத்தையும், கைவசம் உள்ள இன்னொரு புதிய படத்தையும் முடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட போவதாக விஜய் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
‘தி கோட்' படம் ரிலீசான நிலையில், விஜய்யின் அடுத்த படம் (69-வது படம்) குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் விஜய்யின் புதிய படத்துக்கான அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. விஜய்யின் 69-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தீப்பந்தத்தை கையில் ஏந்தியபடியான படத்தின் போஸ்டரும் வெளியானது.
‘ஜனநாயகத்தின் ஒளி விளக்கை ஏற்றுபவன்' என்ற அடைமொழியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கி, படம் 2025-ம் ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர நடிகர்-நடிகைகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்ட தகவலாக நேற்று அமைந்தது.
இந்த புதிய படத்தின் மூலம் விஜய்-எச்.வினோத் கூட்டணி முதன் முறையாக கைகோர்க்க இருக்கிறார்கள். எச்.வினோத் இயக்கத்தில் ‘சதுரங்க வேட்டை', ‘தீரன் அதிகாரம் ஒன்று' ‘நேர்கொண்ட பார்வை', ‘வலிமை', ‘துணிவு' ஆகிய படங்கள் இதற்கு முன்பாக வெளியாகி உள்ளன. விஜய்யின் புதிய படத்தில் அரசியல் பற்றி கருத்து சொல்லப்பட்டிருக்குமோ... என விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்!
புதன் 29, அக்டோபர் 2025 11:03:27 AM (IST)

கபாலி வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 3:34:45 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)

