» சினிமா » செய்திகள்

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் குரல் ஏஐ மூலம் மாற்றம்!

புதன் 25, செப்டம்பர் 2024 11:35:16 AM (IST)



வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘வேட்டையன்’. தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் ‘வேட்டையன்’ படத்தின் டீசர் வெளியானது. இதில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்துக்கு பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இது தொடர்பாக இணைய வெளியில் பல்வேறு கருத்துகள் வெளியாகின. ‘அமிதாப் பச்சனுக்கான பின்னணி குரல் அறவே ஒட்டவே இல்லை’ என பலரும் தெரிவித்தார்கள்.

இந்தக் கருத்துகளை முன்வைத்து அமிதாப் பச்சன் கதாபாத்திரத்துக்கு அவருடைய குரலையே அனைத்து மொழிகளிலும் உபயோகிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதனை சாத்தியப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் முடிந்துவிடும் என தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory