» சினிமா » செய்திகள்

குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்!

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:03:32 PM (IST)

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் தனது அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளியாகி உள்ள குட் பேட் அகலி திரைப்படத்தில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ ஆகிய 3 பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 

இந்நிலையில் படத்தில் இந்த 3 பாடல்களை பயன்படுத்தியதற்காக தமக்கு இழப்பீடாக ரூ.5 கோடி தரவேண்டும் என்று கூறி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 3 பாடல்களையும் படத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும், 7 நாட்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம்!

செவ்வாய் 25, நவம்பர் 2025 11:45:20 AM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory