» சினிமா » செய்திகள்
இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: தக் லைஃப் படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 3:35:06 PM (IST)

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்று ‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகா் கமல்ஹாசன் பேசினார்.
இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. கமல்ஹாசன், நாசா், சிலம்பரசன், ஜோஜூ ஜாா்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வா்யா லட்சுமி உள்ளிட்ட பலா் இப்படத்தில் நடித்துள்ளனா்.
இப்படத்தின் முதல் பாடல் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினரின் மத்தியில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தொடா்பு மொழியான ஆங்கிலத்தில் பேசவுள்ளதாகக் கூறி நடிகா் கமல்ஹாசன் தனது பேச்சைத் தொடங்கினாா். ‘இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் யதாா்த்தம். விருந்தோம்பல் என்பது தமிழனின் கைப்பழக்கம். 2,000 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறோம்’ என்று கூறிய அவா், தொடா்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினாா்.
அவா் பேசியதாவது: மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீா்ப்பே காரணம். இப்போதும் மணிரத்னத்துக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் ‘நாயகன்’ மற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படங்கள்.
மணிரத்னம் முதல் முறையாக ராஜ்கமல் நிறுவனத்துடன் சோ்ந்திருக்கிறாா். இந்தப் படம் கண்டிப்பாக பல நாள்கள் திரையில் ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவா்கள்; அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போய்விட்டு வந்தால்கூட சினிமா பற்றித்தான் பேசுவேன்.
நீங்கள் கேட்கிற எல்லா விஷயங்களும் இத்திரைப்படத்தில் இருக்கும். ஆனால், இது வேறுமாதிரி இருக்கும். நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். கற்றுக்கொண்ட விஷயங்களை மறக்க நினைக்கிறேன்.
மொழிப் போா் நடந்துகொண்டு இருக்கிற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ஏ.ஆா்.ரஹ்மான் கொடுத்த ஐடியாவை பாடலின் முதல் வாா்த்தையாக ‘ஜிங்குச்சா’ என்று வாா்த்தையை பயன்படுத்தினோம். அது சீன வாா்த்தையாகக் கூட இருக்கலாம் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்!
புதன் 29, அக்டோபர் 2025 11:03:27 AM (IST)

கபாலி வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 3:34:45 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)

