» சினிமா » செய்திகள்
கேரளாவில் அமரன் திரைப்படத்திற்கு விருது!!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:09:25 PM (IST)

கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை வென்றது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாயிற்று. இப்படம் இதுவரை சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பல உயரிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சர்வதேச அளவில் ‘அமரன்’ படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. அமெரிக்காவில் நடக்கும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் 'அமரன்' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் படங்கள் லிஸ்டில் ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்தது.
இந்நிலையில், கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ வென்றுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திற்கு கேரள அமைச்சர் வாசவனிடம் விருதை பெற்றுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு: பத்ம பூஷன் விருதுபெற்ற மம்மூட்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
திங்கள் 26, ஜனவரி 2026 10:09:32 AM (IST)

ஏகே 64 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
சனி 24, ஜனவரி 2026 4:12:47 PM (IST)

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!
சனி 24, ஜனவரி 2026 3:21:08 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன்!
வியாழன் 22, ஜனவரி 2026 10:15:27 AM (IST)

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

