» சினிமா » செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் மறு வெளியீட்டில் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் படையப்பா அதிக திரைகளில் மறுவெளியீடானது.ரஜினியின் 75-வது பிறந்த நாளில் மறுவெளியீடானதால் சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இப்படத்தைக் கொண்டாடினர்.பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வெளியான இரண்டு நாள்களிலேயே ரூ. 6 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனால், 25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடாகியும் வசூல் வெற்றியைப் பெற்றுள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory