» சினிமா » செய்திகள்
பேயை விட ஏஐ-யைப் பார்த்தால் தான் பயமாக இருக்கிறது : நடிகர் சந்தானம் கலகல பேச்சு!!
ஞாயிறு 8, மார்ச் 2026 1:30:36 PM (IST)

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நடைபெற்ற இணையவழி (சைபர்) குற்றத்தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியில் நடிகர் சந்தானம் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து கண்ணகி சிலை வரை நேற்று நடைபெற்ற இந்தப் பேரணியைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் சந்தானம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: "முன்பெல்லாம் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து திருடினார்கள். ஆனால் இப்போது வீடியோ கால் மூலமாகவே உங்கள் இடத்திற்கே வராமல் திருட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த எல்லா குற்றங்களுக்கும் நம் கையில் இருக்கும் செல்போனே தொடக்கமாக இருக்கிறது.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எனப் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துகிறோம். போனை சும்மா வைப்பதில்லை; வாழைக்காய் பஜ்ஜி போடுவது போல எப்போதும் போனைத் தடவிக்கொண்டே இருக்கிறோம். இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் சைபர் குற்றவாளிகள் நம்மை எளிதாக ஏமாற்றுகிறார்கள்."
தொடர்ந்து தனது பாணியில் பேசிய அவர், "இப்போது பேயைப் பார்த்துப் பயப்படுவதை விட, ஏஐ (AI - செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பார்த்துப் பயப்படுவதுதான் அதிகமாகிவிட்டது. எனவே, சைபர் மோசடிகள் தொடர்பாகப் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மோசடிக்குள்ளானால், உடனடியாக 1930 என்ற உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை ஆணையர் ஸ்ரீநாதா, "கடந்த 2025 ஜனவரி 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை 3,692 இணையவழி குற்றப் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 164 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று குறிப்பிட்டார்.
விழிப்புணர்வுப் பேரணி
இப்பேரணியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் ஆன்லைன் வர்த்தக மோசடி, டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடி மற்றும் சமூக வலைதளங்களை கவனமாகக் கையாள்வது குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன், துணை ஆணையர் கீதாஞ்சலி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வடசென்னை 2 விரைவில் தொடங்கும்: தனுஷ், வெற்றிமாறன் தகவல்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:25:24 PM (IST)

வால்மீகி ராமாயணா திரைப்படத்திற்கு இளையராஜா இசை: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:45:45 PM (IST)

விஜய்தான் அடுத்த முதல்வர்: நட்டி நட்ராஜ் ஆதரவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:43:32 PM (IST)

ரஜினி படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகல்?
புதன் 15, ஏப்ரல் 2026 10:34:23 AM (IST)

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:40:08 PM (IST)

இணையத்தில் ஜனநாயகன் படக்கசிவு: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி, சூர்யா வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 5:27:14 PM (IST)

