» சினிமா » செய்திகள்
அனிருத் செய்த உதவி.. மேடையிலேயே கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!
புதன் 8, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது திரையுலகப் பயணத்தின் தொடக்க காலத்தில் இசையமைப்பாளர் அனிருத் தமக்குச் செய்த பேருதவி குறித்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'எல்.ஐ.கே' (Love Insurance Kompany) திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டார்.
அப்போது தனது போராட்டக் காலங்கள் குறித்து அவர் பேசியதாவது: நானும் ரௌடிதான் திரைப்படத்தைப் பாண்டிச்சேரியில் படமாக்கத் திட்டமிட்டிருந்தேன். அதற்காக இடங்களைப் (Locations) பார்க்கப் புறப்பட்டபோது என்னிடம் வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்தது. அந்தச் சூழலில் அனிருத்திடம் சொல்லிவிட்டு இரவு பேருந்தில் ஏறினேன்.
சிறிது நேரம் கழித்து அனிருத்திடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், 'விக்கி, உன் பையில் 50 ஆயிரம் ரூபாய் வைத்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் நெகிழ்ந்து போனேன். அந்தப் பேருந்துப் பயணத்தில் ஜன்னல் கம்பிகள் நனையும் அளவிற்கு அழுதுகொண்டே சென்றேன். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு அனிருத்."
அனிருத் எப்போதும் தனது படங்களுக்குத் தூணாக இருப்பவர் என்று குறிப்பிட்ட விக்னேஷ் சிவன், 'எல்.ஐ.கே' திரைப்படம் ரசிகர்களைக் கண்டிப்பாக ஏமாற்றாது என்றும், அதன் மீது தனக்குப் பெரிய நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 6, ஜூலை 2026 12:28:49 PM (IST)

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் 6 இயக்குநர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:09:16 PM (IST)

அரசன் படம் வசூலில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும்: தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை!
சனி 4, ஜூலை 2026 5:36:02 PM (IST)

பராசக்தி பட சம்பள பாக்கி விவகாரம்: டான் பிக்சர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 2, ஜூலை 2026 11:45:39 AM (IST)

பாலிவுட் சூப்பர்ஹிட் படங்களின் உண்மையான அஸ்திவாரம் பாக்யராஜ்: அனில் கபூர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:12:00 PM (IST)

ஐந்து ரூபாய் மருத்துவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:05:34 PM (IST)

