» சினிமா » செய்திகள்
ஜனநாயகன் திரைப்படம் லீக் விவகாரம்: படத்தொகுப்பாளர் இடை நீக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:09:09 AM (IST)
ஜனநாயகன்' திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரத்தில், அப்படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ், எடிட்டர் யூனியனில் (படத்தொகுப்பாளர்கள் சங்கம்) இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
'ஜனநாயகன்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம், படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தது.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்டமாகச் சந்தேகத்தின் பேரில் 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் முக்கிய குற்றவாளி உட்பட 9 பேரைக் கைது செய்தனர். இந்த விசாரணையில், ஒரு 'ப்ரீலான்ஸ்' (Freelance) உதவி எடிட்டர் மூலமாகவே படம் சமூக வலைதளங்களில் கசிந்தது உறுதியானது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, எடிட்டர் யூனியன் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, எடிட்டர் பிரதீப் ராகவ் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். படம் கசிந்ததற்கு அவர் நேரடி காரணம் இல்லை என்றாலும், பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டது மற்றும் சங்க விதிகளை மீறி, உறுப்பினர் அல்லாத ஒருவரைத் தனது உதவியாளராகப் பயன்படுத்தியது போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

50 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் முதல்வரின் திரைப்படம்: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் சாதனை!
வியாழன் 23, ஜூலை 2026 4:51:10 PM (IST)

நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை அக்-1ல் ரிலீஸ்
புதன் 22, ஜூலை 2026 5:54:13 PM (IST)

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும்: ஆனந்த் அறிவுறுத்தல்!
சனி 18, ஜூலை 2026 4:16:27 PM (IST)

ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 6, ஜூலை 2026 12:28:49 PM (IST)

