» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக முக்கியப் பிரமுகர் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் - சீமான் திடீர் சந்திப்பு!

திங்கள் 6, ஜூலை 2026 4:49:59 PM (IST)

திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற திருமண விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். இதே விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது, பரஸ்பரம் கட்டித்தழுவியும் கைகளைக் குலுக்கியும் நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் திருமண மேடையில் அருகருகே அமர்ந்து சிறிது நேரம் சுமுகமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "சிலர் பதவி வந்தவுடன் நம்மை விட்டுச் சென்றுவிட்டனர்; ஆனால் என்ன நடந்தாலும் திமுகவோடுதான் இருப்போம் என்று உறுதியோடு இங்கு வந்துள்ளீர்கள். இஸ்லாமியத்திற்கும் திமுகவிற்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. யார் என்ன அவதூறுகளைப் பரப்பினாலும் சிறுபான்மையின மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றைக்கும் காவல் அரணாகத் துணை நிற்கும்" எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனப் பரவலான பேச்சு நிலவுகிறது. முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சீமான் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் உற்றுநோக்கப்படுகிறது.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Jul 11, 2026 - 12:01:44 PM | Posted IP 162.1*****

இதான் சீமானின் கட்சியின் பெயர் "நாம் திமுக கட்சி"

inbaJul 10, 2026 - 09:19:32 PM | Posted IP 172.7*****

அப்போ பாேர் நிறுத்தம் வந்துடுமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory