சென்னையை சுத்தம் செய்ய களத்தில் இறங்கிய தலைவர்கள்

சென்னையை சுத்தம் செய்ய களத்தில் இறங்கிய தலைவர்கள்
பதிவு செய்த நாள் ஞாயிறு 13, டிசம்பர் 2015
நேரம் 7:31:36 PM (IST)

சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளதால் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் குப்பை கூளங்களும், சேறும் சகதிகளுமாக காட்சியளிக்கின்றன. சென்னையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரிடையாகவே ஈடுபட்டு வருகிறார். மாநகராட்சியிலுள்ள 200 வட்டங்களில் தேமுதிக துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று காலை அமைந்தகரை பொன்னுசாமி பிள்ளை தோட்டம் (பீ.பீ.கார்டன்) ஸ்கைவாக் எதிரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



Tirunelveli Business Directory