» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போலி சான்றிதழ் விவகாரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர் தேர்ச்சி ரத்து!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 11:06:55 AM (IST)
போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரியின் தேர்ச்சியை ரத்து செய்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேத்கர். இவர் தனது காரில் சைரன் பயன்படுத்தியது, கூடுதல் கலெக்டரின் அறையை பயன்படுத்தியது என தனது அதிகாரத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் இறங்கிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர் தனது சாதி, பார்வைதிறன் உள்ளிட்டவற்றில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் குடிமைப்பணியில் ஊனமுற்றோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அவர் தவறாக பயன்படுத்தியதாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தனது பதவியை தவறாக பயன்படுத்தியது மற்றும் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக மராட்டிய அரசு அவரை ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி பதவியில் இருந்து நீக்கம் செய்தது.
இதற்கிடையே போலி சான்றிதழ் சமர்பித்து பணியில் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நேற்று ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர் வருங்காலங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதவும் நிரந்தரமாக தடைவிதித்து உத்தரவிட்டது.
முன்னதாக இந்த புகார் குறித்து கடந்த 30-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டநிலையில், அவர் விளக்கத்தை சமர்ப்பிக்க தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)

கேரளத்தில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது!
வெள்ளி 20, மார்ச் 2026 4:13:29 PM (IST)

சீனாவுக்கான இந்தியத் தூதராகத் தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 20, மார்ச் 2026 7:52:12 AM (IST)

மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
வியாழன் 19, மார்ச் 2026 4:57:50 PM (IST)

தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு
வியாழன் 19, மார்ச் 2026 4:41:28 PM (IST)

பெங்களூருவில் அதிர்ச்சிச் சம்பவம்: முதியவரை கூரியரில் அனுப்ப முயன்ற குடும்பம்!
புதன் 18, மார்ச் 2026 5:52:45 PM (IST)

