» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 7, நவம்பர் 2024 4:48:15 PM (IST)
நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை நிறுத்தியது. ஜெட் ஏர்வேஸ் திவாலானதையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் பொருட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(NCLAT) இதற்கு அனுமதி அளித்தது.
அதன்படி, ஜலான் கல்ராக் கூட்டு நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது. இதற்காக முதல் தவணையாக ரூ. 350 கோடி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அந்த நிறுவனம் ரூ. 200 கோடியை மட்டும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய எஸ்பிஐ, கனரா வங்கி உள்ளிட்டவை, நிபந்தனைகளை பின்பற்றத் தவறியதாக ஜலான் கல்ராக் நிறுவனம் மீது குற்றம்சாட்டியது.
இந்நிலையில் ஜெட்ஏர்வேஸ் தொடர்பான வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக தீர்வு காண முடியாததால் திட்டம் தோல்வியடைந்ததால் தற்போதைய மோசமான நிதிச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நிறுவனத்தால் வாங்கப்பட்ட கடன்களை அடைக்க ஒருவரை நியமிக்கவும் கடன்களை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கவும் தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐயிடம் கனரா வங்கி புகார் அளித்ததையடுத்து, அந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா, அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி தற்போது ஜாமீனில் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
