» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார் எதிரொலி : பிரபல தொழிலதிபர் கைது!
வியாழன் 9, ஜனவரி 2025 11:35:50 AM (IST)

நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகார் எதிரொலியாக கேரள தொழிலதிபர் போபி செம்மனூர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்துள்ள பாலியல் புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் போபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியாக ஆபாசப் பதிவுகள் பதிவேற்றி களங்கப்படுத்தியதாக ஹனி ரோஸ் கடந்த திங்கள்கிழமை 30 பேரை குறிப்பிட்டுப் புகார் அளித்திருந்தார்.
கண்ணூரில் நடைபெற்ற நகைக்கடை திறப்புவிழா ஒன்றில் தான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கச் சென்றிந்தபோது, அங்கு வருகை தந்திருந்த போபி செம்மனூர், தன்னை அவமதிக்கும் விதத்தில் அநாகரிகமாகப் பேசியதாக புகார் அளித்துள்ளார். அதேபோல, மற்றுமொரு நிகழ்ச்சியிலும், போபி செம்மனூர் இதே பாணியில் பேசிய நிலையில், அவருடைய அநாகரிகமான பேச்சுக்கு பதிலடியாக அந்த தருணத்தில் தான் சபை நாகரிகம் கருதி எவ்விதத்திலும் பதிலளிக்கவில்லை” என்று கூறியுள்ளார் ஹனி ரோஸ்.
இந்த நிலையில், தன் மீதான மேற்கண்ட குற்றச்சாட்டுகளை போபி செம்மனூர் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசியுள்ள பாபி செம்மானூர், "சுமார் 1 மாத காலத்திற்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்டு இப்போது அவர் ஏன் புகார் அளித்துள்ளார் எனத் தெரியவில்லை? அவரை மகாபாரதத்தில் வரும் குந்தி தேவியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தேன். அதில் இரட்டை அர்த்தம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், போபி செம்மனூர் மீது பாரதிய நியாய சங்ஹிதா சட்டப் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67 (டிஜிட்டல் முறையில் ஆபாச கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள்) உள்பட பிணையில் விடுவிக்கப்பட முடியாத பிரிவுகளில் கொச்சி நகரக் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை(ஜன. 7) வழக்குப்பதிந்தனர்.
இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி போபி செம்மனூர் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வயநாட்டில் உள்ள் தனது எஸ்டேட்டில் தங்கியிருந்த போபி செம்மனூர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பாலியல் புகார் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இவ்விவகாரத்தில் ஹனி ரோஸுக்கு மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கம்(அம்மா) ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல திரைத்துறைக் கலைஞர்கள் பலரும் ஹனி ரோஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். செம்மனூர் இண்ட்ர்நேஷனல் ஜுவல்லர்ஸ் இயக்குநரான போபி செம்மனூர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருபவரும்கூட.
கேரள மக்களிடம் நன்கு அறியப்பட்ட இவர் உலகப் புகழ் பெற்ற அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனாவை கடந்த 2012-ஆம் ஆண்டில் கேரளத்துக்கு அழைத்து வந்திருந்தது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 2014-ஆம் ஆண்டு கேரளத்தின் வடக்கு எல்லையிலிருந்து தெற்கு வரை ஓட்டமாக ஓடி ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை குறித்து இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
