» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாராளுமன்றத்தை மூடிவிடுங்கள்: உச்சநீதிமன்ற உத்தரவு மீது பா.ஜ.க. எம்.பி., அதிருப்தி!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:19:22 PM (IST)
உச்சநீதிமன்றமே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என பாஜக எம்பி விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை அதிருப்தியில் உள்ளாக்கி இருக்கிறது. இதில் முக்கியமாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக சாடினார். குறிப்பாக, ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை கடுமையாக விமர்சித்த அவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூப்பர் பாராளுமன்றமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ஜார்க்கண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே என்பவர், மேற்படி வழக்குகள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைமுகமாக உச்சநீதிமன்றத்தை சாடியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உச்சநீதிமன்றமே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
அமெரிக்காவுடன் அவசர ஒப்பந்தம் ஏன்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி!
சனி 21, பிப்ரவரி 2026 5:21:14 PM (IST)

பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த அரசு டாக்டர்கள்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
சனி 21, பிப்ரவரி 2026 10:58:36 AM (IST)

பாபர் பெயரில் மசூதிகள் கட்டத் தடை கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:45:54 PM (IST)

டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ரோபோ நாய் செயலால் சர்ச்சை: ராகுல் காந்தி கண்டனம்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 12:24:21 PM (IST)

இலவச அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததா? - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:32:40 PM (IST)

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை? மத்திய அரசு ஆலோசனை
வியாழன் 19, பிப்ரவரி 2026 7:58:56 AM (IST)

