» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது

ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)



கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கல்லூரியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

கொல்கத்தாவில் சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படித்து, தற்போது தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் மனோஜித் மிஸ்ரா, மற்றும் அதே கல்லூரி மாணவர்களான ஜாயிப் அகமது, பிரமித் ஆகியோரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான புகாரின்பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் மனோஜித் மிஸ்ரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக அந்த கல்லூரியின் காவலாளியையும் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த அவர், மாணவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளதால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன் விவரம் வருமாறு: பாதிக்கப்பட்ட மாணவி, ஒரு தேர்வுக்காக விண்ணப்பத்தை நிரப்புவதற்காக கடந்த 25-ந்தேதி கல்லூரிக்குச் சென்றார். அந்த வேலை முடிந்ததும் அவர் அங்குள்ள அறை ஒன்றில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மனோஜித் உள்ளிட்ட 3 பேரும், மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த மாணவயிடம் மனோஜித் வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவி மறுத்ததுடன். தான் வேறு ஒருவரை விரும்புவதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜாயித், பிரமித் ஆகியோர், உனது காதலனை மறந்துவிடு. இல்லை என்றால் அவனை தீர்த்து கட்டி விடுவோம் என்றும், உனது பெற்றோரையும் பொய் வழக்கில் சிக்க வைப்போம் என்று மிரட்டியுள்ளனர். ஆனாலும் அந்த மாணவி அவர்களுக்கு உடன்படவில்லை. எனவே அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுமை அன்று இரவு 7.30 மணியில் இருந்து 10.30 மணி வரை நடந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மனோஜித், திரிணாமு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. முதல்-மந்திரி மம்தாவை பதவி விலகக்கோரியும், மாணவிக்கு நியாயம் கேட்டும் பா.ஜனதாவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு உள்ளது. எனவே முதல்-மந்திரி மம்தா மன்னிப்பு கேட்பதுடன், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள்.மாணவி பலாத்கார விவகாரத்தை விசாரித்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா. ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மாணவி, பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதுபோன்ற போராட்டத்தை பா.ஜனதா தற்போது முன்னெடுத்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory