» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் அமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
செவ்வாய் 8, ஜூலை 2025 4:39:15 PM (IST)
பீஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.

அம்பேத்கரால் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்தது. அதன்பின்னர், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காகத் திருத்தப்பட்டது. இன்று, தேர்தல் ஆணையம் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. யாரை மகிழ்விக்க இந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த சூழ்ச்சிகளை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மக்கள் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொடர்ந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டால் அரசியலமைப்பைக் காப்பற்ற போராட்டம் நடைபெறும். அது முந்தைய போராட்டத்தை விட பெரியளவில் இருக்கும் என்றார்.
ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் பீஹாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்களை வெளியிட்டது, இதில் தகுதியற்ற பெயர்களை நீக்கி, தகுதியான குடிமக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதாகத் தெரிகிறது. பீஹாரில் கடைசியாக 2023ல் திருத்தம் செய்யப்பட்டது. மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இந்தாண்டின் நவம்பர்- டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)

அரசு பங்களாவை 2 வாரத்தில் காலி செய்து விடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
திங்கள் 7, ஜூலை 2025 4:45:26 PM (IST)

பீகார் தொழிலதிபர் சுட்டுக்கொலை: இறுதிச் சடங்குக்கு வந்த குற்றவாளி கைது!
திங்கள் 7, ஜூலை 2025 11:48:28 AM (IST)

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)
