» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு‍ காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: பாலம் இடிந்து சேதம் - வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி!

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:58:04 PM (IST)



ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் நேர்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் நேர்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ராம்பன் - தோடா மாவட்டங்களுக்கு இடையேயான முக்கிய சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள், சொத்துகள் சேதமடைந்துள்ளன. பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட குல்மார்க் பகுதியிலுள்ள நல்லா நதியில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. 

இதனால், நதியின் இரு கரைகளில் உள்ள மக்களும் போக்குவரத்து இன்று தனித்துவிடப்பட்டுள்ளனர். கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலை - தோடா இடையேயான இணைப்புச் சாலைகளுக்கு மாற்றுப்பாதையாக இந்த பாலம் இருந்துவந்த நிலையில், தற்போது அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலுள்ள வாரன் பள்ளத்தாக்கில் கடந்த 27ஆம் தேதி மேக வெடிப்பு நேர்ந்தது. இதில், 50க்கும் அதிகமான வீடுகள் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டன. விவசாய நிலங்கள் சரிந்து பயிர்கள் சீர்குலைந்தன. எனினும் இதில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

இதனைத் தொடர்ந்து 27ஆம் தேதி நேர்ந்த மேக வெடிப்பில் ராம்பன் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராம்பன் - தோடா இடையேனான முக்கிய சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory