» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடியின் நண்பர்களால் இந்தியாவிற்கு பல சிக்கல்கள்: கார்கே விமர்சனம்!!
புதன் 24, செப்டம்பர் 2025 3:30:17 PM (IST)

பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரியை அபராதமாக விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது அமெரிக்கா விதித்த மொத்த வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி நியாயமற்றது என இந்தியா கூறியுள்ளது.
அதே சமயம், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு சீனாவும், இந்தியாவும் நிதி அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வாரம், டிரம்ப் நிர்வாகம் H-1B விசாக்களை பெறுவதற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்தது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது; "சர்வதேச அளவில் நமது நாட்டிற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் தூதரக உறவிகளில் ஏற்பட்ட தோல்வியே காரணம். பிரதமர் 'எனது நண்பர்கள்' என்று பெருமையாகக் கூறும் அதே நண்பர்கள்தான் இன்று இந்தியாவிற்கு ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)

கரூரில் 41 உயிரிழந்த உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:20:37 AM (IST)

தமிழகம், கேரளம் உட்பட 10 மாநிலத்தில் பணியாற்ற பெண்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்
சனி 11, அக்டோபர் 2025 4:49:09 PM (IST)
