» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

வியாழன் 9, அக்டோபர் 2025 4:41:04 PM (IST)



இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர்,  மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பிரிட்டன் பிரதமராக கேர் ஸ்டார்மர் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அவர், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை தொடங்கியுள்ளார். அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மும்பையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory