» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி: 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு
சனி 15, நவம்பர் 2025 12:19:55 PM (IST)
பீகாரில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சியின் வேட்பாளர்கள் 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர்.
பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் ஜன்சுராஜ் கட்சி 236 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் முதலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் போட்டியில் இருந்து கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் விலகினார். தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார்.
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்து மீண்டும் மது விற்பனையைத் தொடங்குவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவரது கட்சிக்கு பீகார் மக்கள் படுதோல்வியைப் பரிசளித்துள்ளனர். போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.
சில இடங்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை ('நோட்டா') வாக்குகளை விடவும் குறைவாகப் பெற்றனர். இதன் மூலம் பீகார் மக்கள் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை முழுமையாக புறக்கணித்து இருப்பது தெரியவந்துள்ளது.தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பிரசாந்த் கிஷோர் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. அதுபோல இந்தியா கூட்டணி தலைவர்களும் பிரசாந்த் கிஷோரை கண்டு கொள்ளாமல் தவிர்த்தனர். இதுவும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ளார். அப்போது தேர்தல்களில் அக்கட்சிகள் வெற்றி பெற்றதால் தேசிய அளவில் மிகவும் பிரபலமான அரசியல் நிபுணராக பிரசாந்த் கிஷோர் உருவெடுத்தார். ஆனால் அவரது கட்சிக்கு பலன் அளிக்காமல் போய்விட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:08:06 AM (IST)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
வெள்ளி 14, நவம்பர் 2025 10:34:51 AM (IST)

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 13, நவம்பர் 2025 5:34:27 PM (IST)

கோவளம் கடற்கரைக்கு 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்!
புதன் 12, நவம்பர் 2025 12:25:27 PM (IST)

டெல்லி குண்டுவெடிப்பில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்குத் தொடர்பு: முக்கிய தடயங்களைச் சேகரிப்பு
புதன் 12, நவம்பர் 2025 11:14:39 AM (IST)




