» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஏடிஎம் வாகன கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது : ரூ. 5.76 கோடி பறிமுதல்!
சனி 22, நவம்பர் 2025 4:57:44 PM (IST)

பெங்களூருவில் ஏடிஎம் வாகன கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 5.70 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 7.11 கோடி பணத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன வானத்தில் கடந்த 19ம் தேதி ஊழியர்கள் சென்றனர். அந்த வாகனத்தில் டிரைவர், துப்பாக்கியுடன் கூடிய 2 பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர்.
இதனிடையே, ஜெயநகர் அருகே அசோக் பில்லர் பகுதியில் சென்றபோது அந்த வாகனத்தை சொகுசு காரில் வந்த சிலர் இடைமறித்தனர். ரிசர்வ் வங்கி, மத்திய அரசு அதிகாரிகள் என கூறிக்கொண்ட அவர்கள் பணத்தை சோதனை செய்ய வேண்டும் என கூறி வாகனத்தை கடத்தி சென்றனர். பின்னர், அந்த வாகனத்தில் இருந்த ரூ. 7.11 கோடி பணத்தை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏடிஎம் வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஏடிஎம் வாகன கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் அன்னப்ப நாயக், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவியர், பணத்தை எடுத்துசெல்லும் வாகனத்திற்கான பொறுப்பாளர் கோபால் பிரசாத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 5.70 கோடி மீட்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ள நிலையில் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அதேவேளை, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 30 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு
திங்கள் 24, நவம்பர் 2025 10:52:54 AM (IST)

நீதியை நிலை நாட்ட எப்போதும் முயற்சித்தேன் : ஓய்வு பெறும் நாளில் பி.ஆர். கவாய் உருக்கம்
வெள்ளி 21, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

டிரம்ப் வராத தைரியத்தில் மோடி ஜி20 மாநாட்டுக்கு சென்றுள்ளார்: காங்கிரஸ் கிண்டல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:48:56 PM (IST)

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கைது!
வெள்ளி 21, நவம்பர் 2025 11:27:37 AM (IST)

பீகார் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் பதவிஏற்பு : பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!
வியாழன் 20, நவம்பர் 2025 4:38:12 PM (IST)




