» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:01:58 PM (IST)

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(டிச.26) கௌரவித்தார்.
கலை மற்றும் கலாசாரம், வீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவைகள், விளையாட்டு, சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சாதனை புரிந்த 5 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு ஆண்டுதோறும் வீர பால திவஸ் (டிச. 26) நாளில் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருதை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 20 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை வழங்கி கௌரவித்தார். நிகழாண்டு 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 பேர் இந்த விருதுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், ஆவணத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
பிகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூரியவன்ஷி கடந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனது அதிரடி பேட்டிங்கால் வியக்கவைத்த சூரியவன்ஷி, 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக்கோப்பை, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர், இளம்வீரர்களுக்கான ஒருநாள், இளம்வீரர்களுக்கான டெஸ்ட், இந்தியா ஏ என அனைத்துப் போட்டிகளிலும் சதம் விளாசி அசத்தி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரிலும் 84 பந்துகளில் 190 ரன்கள் விளாசி வியக்கவைத்தார். பால புரஸ்கார் விருது பெற்ற வைபவ் சூரியவன்ஷி, பிரதமர் மோடியையும் சந்திக்கவிருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூரு மசாஜ் மையத்தில் கனடா பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊழியர் கைது!
புதன் 11, பிப்ரவரி 2026 12:21:43 PM (IST)

வீடுகளில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஐடி ஊழியர் கைது: தங்க நகைகள், கார் பறிமுதல்!!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:43:30 PM (IST)

ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:30:31 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயார்: முதல்வருக்கு அஸ்வினி வைஷ்ணவ்பதில்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:07:41 PM (IST)

நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:25:11 AM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்
சனி 7, பிப்ரவரி 2026 5:44:50 PM (IST)

