» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை: தேவேந்திர பட்னாவிஸ்

செவ்வாய் 13, ஜனவரி 2026 10:45:15 AM (IST)

மும்பை குறித்த அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை என ராஜ்தாக்கரேக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து உள்ளார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/devendrafadnavis_1768281276.jpgமும்பை மாநகராட்சிக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையொட்டி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலாடு, சயான் கோலிவாடா, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "மக்கள் `மூன்று என்ஜின்' ஆட்சி வரவேண்டும் என விரும்புகின்றனர். நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் இங்கு மட்டும்தான் `மூன்று என்ஜின்' ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

பிரதமர் மோடி டெல்லியில் உள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்-அமைச்சராக இருக்கிறார். தற்போது மும்பை மேயர் பதவியையும் பா.ஜனதா கைப்பற்ற உள்ளது. மும்பை மராட்டிய நகரம் அல்ல, சர்வதேச நகரம்” என்றார்.அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், மும்பை மராட்டியத்தின் நகரம் அல்ல எனக்கூறிய அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும் என்றார்.

அண்ணாமலை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து கூறியதாவது:- அண்ணாமலையின் பேச்சை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர் வேறு மாநிலத்தை சோ்ந்தவர். அது உண்மைதான். அவருக்கு இந்தி சரியாக தெரியாது. அவர் இந்தி பேச முயற்சி செய்கிறார். ஆனால் அவர் பேசியதை பிரதமர் மோடி கூறியது போல தாக்கரே சகோதரர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பம்பாய் என்ற பெயரை மும்பை என மாற்ற முக்கிய காரணமாக இருந்தவர் பா.ஜனதாவை சேர்ந்த ராம்நாயக் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory