» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)
கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடையை நீக்கி அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்து, அவற்றுக்கு ஒப்பந்த வாகனப் போக்குவரத்து அனுமதி வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் மீது இன்று தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில், கர்நாடகாவில் பைக் டாக்ஸிகள் இயக்கத்திற்கு அனுமதி அளித்ததுடன், சட்டப்பூர்வ அனுமதிகளுக்கு உட்பட்டு இருசக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்றும் தீர்ப்பளித்தது.
ராபிடோ, ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளை இயக்குவதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து அந்த நிறுவனங்கள் மேல்முறையீடு செய்திருந்தன.
தற்போது, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ததுடன், நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவைகளை வழங்க தற்போதைய விதிகளின் கீழ் உரிமம் வழங்குவதற்கு, கூடுதல் நிபந்தனைகளை விதிக்கவும் கர்நாடக அரசுக்கு சுதந்திரம் அளித்துள்ளது. மேலும், இருசக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும் பைக் டாக்ஸி நிறுவனங்கள் உரிமங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சட்டங்களின்படி அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
விண்ணப்பங்களின் அனைத்து தொடர்புடைய அம்சங்களையும் மாநில அரசு ஆராயலாம் என்றாலும், வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள் என்பதற்காக மட்டும் டாக்ஸி பதிவை மறுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான முழுமையான தடை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்தது. தெளிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு இல்லாததைக் காரணம் காட்டி, ராபிடோ, ஓலா மற்றும் ஊபர் மோட்டோ போன்ற தளங்களை சட்டவிரோதமானவை என்று அறிவித்த அரசின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கர்நாடக அரசு இந்தத் தடையை அமல்படுத்தியது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்: பினராயி விஜயன் நன்றி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:39:21 PM (IST)

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:53:57 AM (IST)

தூக்க மாத்திரைகள் கொடுத்து கணவனை கொன்ற மனைவி: தலைமறைவான கள்ளக்காதலனுக்கு வலை!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:51:14 AM (IST)

பெங்களூரு விமான நிலையத்தில் கொரிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: ஊழியர் கைது!
வியாழன் 22, ஜனவரி 2026 5:11:36 PM (IST)

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 வீரர்கள் பலி!
வியாழன் 22, ஜனவரி 2026 3:45:41 PM (IST)

கேரள நபர் தற்கொலை: பாலியல் தொல்லை வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது!
புதன் 21, ஜனவரி 2026 4:50:10 PM (IST)