» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

வியாழன் 29, ஜனவரி 2026 12:46:13 PM (IST)

தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் மாநில அரசுகள் தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்வது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தெருநாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனாலும், பல மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் இதுதொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வக்கீல்(அமீகஸ் கியூரி), ‘சுப்ரீம் கோர்ட்டு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதை பல மாநிலங்கள் முறையாக பின்பற்றவில்லை’ என தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள், மாநில அரசுகளின் அறிக்கையில் எந்த முழுமையான விவரமும் இல்லை. மாநில அரசுகள் தெளிவான அறிக்கையை தாக்கல் செய்வது இல்லை. கடமைக்காக அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். அசாம் தவிர வேறு எந்த மாநிலமும், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எத்தனை தெருநாய் கடி சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறித்த தரவுகளை வழங்கவில்லை. தெளிவில்லாத அறிக்கைகளை அளிக்கும் மாநிலங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வாதாடிய அமீகஸ் கியூரி, ‘தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதை அதிகரிக்க வேண்டும். தெருநாய்களுக்கு காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும். சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நாய்கள் மற்றும் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.

மேலும் அவர், இந்த விவகாரத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகளை இன்று (வியாழக்கிழமை) தெரிவிப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து, விசாரணை இன்றும் நடைபெற உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory