» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:14:32 PM (IST)

வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் கர்நாடகாவில் வாழும் கன்னடர்களே; எங்களது உள்விவகாரத்தில் மற்ற மாநிலத்தவர் தலையிடக் கூடாது" என்று கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் பல பத்தாண்டுகளாகக் கர்நாடகாவிலேயே வசித்து வந்தவர்கள். அவர்கள் தமிழர்களாகவோ அல்லது வேறு சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம்; ஆனால், அவர்கள் அனைவரும் எங்கள் கன்னடர்களே."
இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் தொடர்புடைய உள்விவகாரம். இதில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும்? உதாரணத்திற்குத் தேர்தலின் போது விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 21 அல்லது 22-ஆம் தேதிகளில் விசாரணை அறிக்கை வெளியாகும். எங்களது துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."
முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்து:
இதே விவகாரம் குறித்துப் பேசிய முதல்வர் டி.கே. சிவகுமார், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தினார். நமது மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது அவசியம் என்பதால், அவர்கள் தங்களது பணியைப் பார்க்கட்டும்; நாம் நமது பணியைப் பார்ப்போம்."
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மானை வேட்டையாடியதாகக் கூறி, கர்நாடகாவில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்ட நிலையில், உயிரிழந்த 3 தமிழர்களின் உடல்களும் நேற்று அவர்களின் சொந்தக் கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன. இச்சம்பவத்திற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு அதிரடி செக் : 2-வது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% கட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:41:44 PM (IST)

காவிரி வழக்கு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:38:13 AM (IST)

மேற்குவங்கத்தில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 6 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:14:51 PM (IST)

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:37:47 PM (IST)

ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:53:03 AM (IST)

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)


