» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்
சனி 9, நவம்பர் 2024 5:57:32 PM (IST)
உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதிவேக பொருளாதார வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் மற்றும் ஒன்றரை பில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தியா, வல்லரசு நாடுகளின் பட்டியலில் சந்தேகத்திற்கு இடமின்றி சேர்க்கப்பட வேண்டும்.
இந்தியா ஒரு சிறந்த நாடு. இந்தியா-ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பு ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை மட்டும் செய்யவில்லை, நாங்கள் அவற்றை ஒன்றாக வடிவமைக்கிறோம்.
இந்திய ஆயுதப் படைகளிடம் எத்தனை வகையான ரஷிய ராணுவ உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கிறது உள்ளன என்பதைப் பாருங்கள். இந்த உறவில் ஒரு பெரிய அளவிலான நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் 'பிரம்மோஸ்' ஏவுகணையை காற்று, கடல் மற்றும் நிலம் ஆகிய மூன்று சூழல்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உருவாக்கினோம். இந்தியாவின் பாதுகாப்புக்காக இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லையில் சில சிக்கல்கள் உள்ளன. புத்திசாலியான, திறமையான தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, சமரசமான முடிவுகளை தேடுவார்கள், இறுதியில் அதை கண்டுபிடிப்பார்கள்." இவ்வாறு புதின் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)

truthNov 13, 2024 - 09:17:28 AM | Posted IP 172.7*****