» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும், இந்த சந்திப்பானது செளதி அரேபியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் நேற்று ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொலைபேசியில் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் குறித்து விரிவாக பேசியுள்ளார். அப்போது, உக்ரைனுடன் போர் நிறுத்த பேச்சுக்கு புதின் ஒப்புக் கொண்டதாகவும், டிரம்ப்பை ரஷியாவுக்கு அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ரஷிய முடிவுகளை தெரிவித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் உள்துறை செயலாளர், சிஐஏ இயக்குநர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
நேட்டோவில் இணைய முயற்சித்ததால்தான் உக்ரைன் மீது ரஷியா போரைத் தொடங்கிய நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பு போர் நிறுத்தத்துக்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் நிலைபாட்டை தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், "ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இனியும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது இல்லை.
தற்போதைய நிலையில் உள்நாட்டு பாதுகாப்பிலும் சீன அச்சுறுத்தலை எதிா்கொள்வதிலும் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. எனவே, ரஷியாவுடனான போரில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள்தான் இனி முன்னிலை வகிக்க வேண்டும். மேலும், நேட்டோ ராணுவக் கூட்டமைப்புக்கான நிதியுதவியை ஐரோப்பிய நாடுகள் அதிகரிக்க வேண்டும். அமைதி ஏற்படவேண்டும் என்றால் ரஷியாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் நோக்கம் அமைதியை நோக்கியது : ஷெபாஸ் ஷெரீப்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:51:16 PM (IST)

நெட்பிளிக்ஸ் மொத்த படமும் நொடியில் டவுன்லோடு : இணைய வேகத்தில் ஜப்பான் உலக சாதனை!!
சனி 12, ஜூலை 2025 5:32:49 PM (IST)

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)
