» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து: 55பேர் உயிரிழப்பு - 100க்கும் மேற்பட்டோர் மாயம்!

வியாழன் 27, நவம்பர் 2025 4:40:10 PM (IST)



ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட தீவிபத்தில் 55 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் வாங் பெக் கோர்ட் காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் நூற்றுக் கணக்கானோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory