» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா மீதான வரி விதிப்பு 25சதவீதமாக குறைக்கப்படும்: அமெரிக்க அதிகாரி தகவல்

சனி 24, ஜனவரி 2026 3:51:43 PM (IST)


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளதால் இந்தியா மீதான வரி விதிப்பு 25% ஆக குறைக்கப்படும்  என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்துள்ளது என்றும் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷிய எண்ணெயை வாங்கியதற்காக நாங்கள் இந்தியாவின் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம். தற்போது ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன.

இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷிய எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது. அது ஒரு வெற்றியாகும். இந்தியாவின் மீதான வரிகள் இன்னும் அமலில் உள்ளன. அவற்றை நீக்குவதற்கு ஒரு வழி இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தற்போதைய 50 சதவீத வரி, 25 சதவீதமாக குறைக்கப்படலாம் என்று ஸ்காட் பெசென்ட் சூசகமாக தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory